ஆங்கிலப் பிழைகள் இனி இல்லை

உலகமெங்கும் பலதரப்பட்ட மக்கள் பல மொழிகளை பேசினாலும் உலகம் முழுக்க அலுவலக மொழியாக இருப்பது ஆங்கிலம் மட்டுமே. எந்த மொழி பேசுபவராயினும் ஆங்கில கலப்பில்லாமல் பேசுவது சொற்பமே! ஏன் கலப்பில்லாமல் பேசப்படுவதே இல்லை என்று கூட சொல்லிவிடலாம்.

ஆங்கிலம் பேசினால் தான் மதிப்பு என்ற வறட்டு நோய் பரவிவிட்டது இதை தடுக்கவே முடியாது. நம்மால் என்ன செய்ய முடியும்? ஊரோடு நாமும் ஆங்கிலத்தை பேச பழகித்தான் ஆக வேண்டிய நிலை. ஆங்கிலத்தில் தான் படிக்க வேண்டிய நிலை.


ஆங்கிலம் என்பது பல்வேறு மொழிகளின் கலவை தான். ஆனாலும் நம்மில் பல பேரால் ஆங்கிலம் பிழை இன்றி எழுத முடிவதில்லை. ஒரு சிறிய கட்டுரை எழுதினாலும் கூட அவற்றை நன்கு ஆங்கிலம் அறிந்தவரிடம் காட்டி திருத்திக் கொள்வது நமது இயல்பாயிற்று. இனி அவர்களை நாட வேண்டிய அவசியம் நமக்கு இருக்காது. ஏன்?

http://www.grammarly.com/ இந்த வேலையை நமக்கு செய்ய இணையத்தில் காத்திருக்கிறது. நீங்கள் எழுதிய லெட்டர் ஆகட்டும், கட்டுரையாகட்டும் வேறு எதுவாக வேண்டுமாலும் இருக்கட்டும் எல்லாவற்றையும் ஒரு கை பார்த்து விடுகிறேன் என்று சவால் விடுகிறது இந்தத் தளம்.

எப்படி:
 ஹும்! இத்தனை மொழிக்கு பதிலா கடவுள் மனிதனை ஊமையாவே படைத்திருக்கலாம் போல..... செய்கை மொழி மட்டுமேஉலக மொழியாய் இருந்திருக்கும்.



0 comments:

Post a Comment