Domicile:
இதன் தமிழ் பொருள்:
நிரந்தர வசிப்பிடம், வீடு என்பதாகும்.
எப்படி உச்சரிப்பது:
டாமசைல்.
இந்த வார்த்தை தற்போது பரவலாக விண்ணப்பங்களில் காண முடிகிறது. நம் தமிழகத்தில் இருப்பிட சான்றிதழ்க்கு ஆங்கிலத்தில் Nativity certificate என்று குறிக்கிறோம் . ஆனால் இதையே பல மாநிலங்களில் Domicile certificate என்றும் குறிக்கின்றனர்.
விண்ணப்பங்கள் சிலவற்றிலும் நிரந்தர இருப்பிட முகவரி என்பதை குறிப்பிட Permanent Address என்றும், Domicile Address என்றும் குறிப்பிடப்படுகிறது.
இந்த சொல் பரவலாக ஐரோப்பா மற்றும் லத்தின் அமெரிக்கா நாடுகளில் பயன் படுத்தப்படுகிறது.
இனி நாமும் பயன்படுத்துவோம்..................

0 comments:
Post a Comment